‘லவ் டுடே’ இந்தி ரீமேக் குறித்த லேட்டஸ்ட் தகவல்

love today

‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் வெளியீட்டு தேதியினை முடிவு செய்துள்ளது படக்குழு. ‘லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு ‘லவ்யப்பா (LOVEYAPA)’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. பிப்ரவரி 7-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை ஏஜிஸ் நிறுவனம் மற்றும் ஃபேண்டம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் நடித்துள்ளனர்.aamir

தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நாயகனாக நடித்த படம் ‘லவ் டுடே’. இதில் இவானா, யோகி பாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் உலகளவில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தான் இந்தியில் ‘லவ்யப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இப்படத்தின் மூலம் நாயகனாக வலம் வரத் தொடங்கியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ‘டிராகன்’, ‘எல்.ஐ.கே’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீர்த்திஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார்.

Share this story