50 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைக்க இருக்கும் சூப்பர் ஹிட் திரைப்படம். இப்போ வரை ஹவுஸ் புல்.........

photo

நடிகர், இயக்குநர் என் ஒரு சேர அவதாரம் எடுத்து பட்டையை கிளப்பி வரும் பிரதீப் ரங்கநாதன், இன்று பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம்  பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ,இன்றும் கூட பல திரையரங்க்களில் ஹவுஸ் புல்லாகதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

photo

இந்த படத்தில் நாம் பார்த்த ஒரு கதாபாத்திரத்தை கூட சட்டென்று மறந்து விட முடியாது, பல சேட்டைகள் செய்யும் சுட்டி சிறுவன் தொடங்கி , இடிந்து போன சமயத்தில் வாழ்கையை உணர்த்தும் அம்மா  ராதிகா வரை. பிரதீபின் அக்காவை பார்த்தால் அட… நம்ம வீட்டு இல பக்கத்து வீட்டு அக்கா மாதிரி இருக்குல என பலரையும் நினைக்க வைக்கிறது.

photo

எல்லோரது வீடுகளிலும் மொபைல் போனை எடுத்தாலே, திட்டி தீர்க்கும் அம்மாவாக ராதிகா, ஷார்ப் அண்ட் கூர்ப் அப்பா, கூடி கும்மாளம் அடிக்க  மட்டும் அல்ல, பிரச்சனைனு வந்தாகூட நாங்க இருக்கோம் என இருக்கும் நண்பர் கூட்டம். இது எல்லாத்தையும் விட பாய் பெஸ்டி ரெவி தான் ஹய்லெட். இப்படியாக சமகால வாழ்வியல் காதல் என சிரிப்போடு கலந்த மெசேஜ் தான் படத்தின் பிளஸ்.

photo

இந்த நிலையில் ‘லவ் டுடே’ படம் இதுவரை ரூ. 46 கோடி வரை வசூலித்துள்ளதாம். நாளை கண்டிப்பாக ரூ. 50 கோடியை எட்டி நிச்சியமாக 50 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இத்தனைக்கும் படத்தின் மொத்த பட்ஜட் 5 கோடிதானாம்.

Share this story