''வாழ்க்கையே வேற மாறி மாறுடுச்சி'' - 'லவ் டுடே' நாயகி இவானா நெகிழ்ச்சி !

Ivana

என் வாழ்க்கையே தற்போது மாறிவிட்டது என  'லவ் டுடே' கதாநாயகி இவானா தெரிவித்துள்ளார். 

'கோமாளி' படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த திரைப்படம் 'லவ் டுடே'. இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்திருத்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

வெறும் நான்கு கோடிக்கு எடுக்கப்பட்ட இப்படம் 80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த படத்தின் 100வது நாள் வெற்றியை படக்குழுவினர் நேற்று பிரம்மாண்டமாக கொண்டாடினார். இதில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிகை இவானா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

Ivana

இந்த நிகழ்ச்சியில் பேசிய இவானா, இந்தப் படத்தின் மூலம் எனக்கு கிடைத்த வரவேற்பு மிகப் பெரியது. இப்போது என்னுடைய வாழ்க்கையே வேற மாதிரியாக செல்கிறது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த படக்குழுவினருக்கு  நன்றி. இந்த படத்தில் நடித்த போது நடிகர் சத்யராஜிடம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் என்று அவர் கூறினார்.

 

Share this story