‘லவ் டுடே’ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. தயாரிப்பாளரின் முக்கிய அறிவிப்பு !

love today

 ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘லவ் டுடே’ படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

love today

இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகிபாபு, அஜித் காலிக், ரவீனா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாறுபட்ட காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் திரையரங்கிற்கு பிறகான டிஜிட்டல் உரிமையை நெட் பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனத்தின் நிர்வாகி அர்ச்சனா கல்பாதி அறிவித்துள்ளார். 


 

Share this story