'லவ் டுடே' படத்தின் முதல் நாள் வசூல்……..முதல் நாளே இவ்வளவு வசூலா!

photos

முன்னனி ஹீரோ படங்களுக்கு இணையான வசூலை தனது முதல் படத்திலேயே கொடுத்து அசத்தியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.

photos

'கோமாளி' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்பொழுது இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’ இந்த படத்தில் கதாநாயகியாக  இவானா நடித்துள்ளார், ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

photos

.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகி பலரையுமே வாய் பிளக்க வைத்துள்ளது, அதாவது தமிழகத்தில் மட்டுமே சுமார் ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

photos

முன்னனி ஹீரோக்களின் படங்கள் கூட செய்யாத சாதனையை பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படத்திலேயே செய்துள்ளார் என சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

Share this story