வாயடைக்க வைத்த ‘லவ் டுடே’ படத்தின் மொத்த வசூல்- உறுதிப்படுத்திய அர்ச்சனா கல்பாத்தி

photo

2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. இந்த படம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை இயக்கி நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

photo

இந்த படத்தில்நாயகியாக இவானா நடித்துள்ளார்இவர்களோடுயோகிபாபுசத்யராஜ்ராதிகாரவீனா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.  ரசிகர்களின் பேராதரவால் படம் விமர்சன ரீதியாவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனம் தயாரிப்பில் அவர்களது 22வது படமாக உருவான இப்படத்தை வாரிசுபடத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தனது ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் மூலம் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டிருந்தார். அங்கும் நல்ல வசூல் கிடைத்தது.

photo

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பெரிய நடிகர்களின் எந்த படம்  முதன்முறையாக 100 கோடி வசூலித்தது என்ற லிஸ்ட் ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் லவ் டுடே இல்லை .இதனை பார்த்த அர்ச்சனா கல்பாத்தி லவ் டுடே 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் 100 கோடியா என வாயடைத்து போயுள்ளனர்.

Share this story