தெலுங்கில் வெளியாகும் ‘லவ் டுடே’... டிரெய்லரை வெளியிடும் சூப்பர் ஹீரோ !

love today

 பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் தெலுங்கு டிரெய்லர் பிரபல நடிகர் வெளியிட உள்ளார். 

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் அடுத்த படைப்பாக உருவாகி வெளியான படம் ‘லவ் டுடே’. இந்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 22வது படமாக உருவான இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வெளியானது. 

love today

இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெறும் 4 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 20 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. 

காதல் ஜோடி தங்களது மொபைல் போனை மாற்றிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதே இந்த படத்தின் கதைக்களம். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் ‘லவ் டுடே’ படம் வெளியாகவுள்ளது. ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, தனது ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் மூலம் இப்படத்தை வெளியிடவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டிரெய்லரை நாளை மதியம் 12.10 மணிக்கு பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படம் வரும் நவம்பர் 18-ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story