தமிழில் கிடைத்த வெற்றி... தெலுங்கில் வெளியாகும் 'லவ் டுடே' ?

love today

தமிழில் கிடைத்த வரவேற்பையடுத்து பிரதீப் ரங்கராதனின் 'லவ் டுடே' திரைப்படம் தெலுங்கில் வெளியாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

 ‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. முதல்முறையாக ஹீரோவாக இந்த படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 22வது படமாக இப்படம் உருவாகி வெளியாகியுள்ளது. காமெடி கலந்த காதலை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.  

‘கோமாளி’ படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’. முதல்முறையாக ஹீரோவாக இந்த படத்தின் மூலம் களமிறங்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனத்தின் 22வது படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி வெளியாகியுள்ளது. சமகால காதலை பற்றி பேசியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  

கடந்த நவம்பர் 4-ஆம் தேதி வெளியான இப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மூன்று நாட்களில் 20 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் இந்த படத்திற்கு தமிழில் கிடைத்த வரவேற்பை அடுத்து தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ இப்படத்தை வரும் நவம்பர் 18-ஆம் தேதி வெளியிட தகவல் வெளியாகியுள்ளது.

Share this story