மீண்டும் இணையும் ‘லவ் டுடே’ கூட்டணி. அடுத்த வேட்டைக்கு தயார்.

photo

குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பல கோடிகளை வாரிகுவித்து வசூல் வேடை நடத்திய திரைப்படம்’ லவ்டுடே’. இந்த படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதில் ஹீரோவாக நடித்து சினிமாவில் அறிமுகமாகியிருந்தார் பிரதீப் ரங்கநாதன். இவருக்கு ஜோடியா இவானா நடித்திருந்தார். இவர்களோடு ராதிகா சரத்குமார், சத்தியராஜ், யோகிபாபு நடித்து அசத்தினர்.

photo

படத்திற்கு பெரிய பக்கபலமாக இருந்தது படத்தின் இசை, யுவன் ஷங்கர் ராஜா  இசையில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த நிலையில் தமிழகத்தை கடந்து படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளும் தொடங்கியுள்ளது. 

photo

இந்த தகவல் ஒருபுறம் இருக்க, தற்போது ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது, அதாவது இயக்குநர் பிரதீப், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர், படத்தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் இந்த கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Share this story