‘லவ்வர்’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் குறித்த சூப்பர் அப்டேட்!.....

photo

‘லவ்வர்’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

photo

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் மணிகண்டன், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த அவகையில் தற்போது  இவர் கல்லூரி மாணவராக ‘லவ்வர்’ படத்தில் நடித்து வருகிறார். பீட்சா 2, விக்ரம் வேதா, காலா என பல படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்து அசத்திய மணிகண்டனுக்கு நல்ல பெயரை வாங்கிகொடுத்த படம்ஜெய்பீம்’. அந்த படத்தில் மணிகண்டனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தொடர்ந்துகுட்நைட்எனும்படத்தில் நடித்தார்இந்த நிலையில் தற்போது இயக்குநர் பிரபுராம் இயக்கத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் மணிகண்டம், படத்தில் இவருடன் இணைந்து ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணன் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடந்த சில நாட்களாக படத்தின் அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ள நிலையில் தற்போது ஃபஸ்ட் சிங்கிள் அப்டேட் வந்துள்ளது.


அதன்படி, ‘விலகாத’ என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Share this story