தொடங்கியது ‘ரப்பர் பந்து’ ஷூட்டிங்... விறுவிறுப்பாக நடக்கும் பணிகள் !

LubberPandhu

 ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் இணைந்து நடிக்கும் ‘ரப்பர் பந்து’ படத்தின் ஷூட்டிங் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

LubberPandhu

'நெஞ்சுக்கு நீதி' படத்தில் வசனக்கர்த்தாவாக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகம் திரைப்படம் ‘ரப்பர் பந்து’. பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் பிரபலமாகியுள்ள ஹரிஷ் கல்யாண் கதாநாயகியாக நடிக்கிறார். ‘அட்டக்கத்தி’ தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

LubberPandhu

'வதந்தி' வெப் தொடரில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  இவர்களுடன் பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராகவும், ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

LubberPandhu

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறுகிய காலத்தில் படத்தை முடித்து வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

Share this story