ஹரிஷ் கல்யாணின் "லப்பர் பந்து" படத்தின் டிரைலர் ரிலீஸ்

Lubber pandhu
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனி ஆடியோ உரிமை பெற்று உள்ளது. படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகிய நிலையில். திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்தது.அதன்படி, லப்பர் பந்து திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. டிரைலரை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும், லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Share this story