ரூ.100 கோடி வசூலை அள்ளிய லக்கி பாஸ்கர்...!
1731573957000
நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் 24 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது. இதனை படக்குழு ஒரு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.