'லக்கி பாஸ்கர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’. இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தனியார் வங்கி ஊழியரான துல்கர் சல்மான் பணக் கஷ்டம் காரணமாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பதவி உயர்வு கிடைக்காமல் போக, வங்கியில் திருட்டு வேலையில் ஈடுபட்டு ராம்கியுடன் இணைந்து தொழில் செய்கிறார்.
Adhrushtam oka manishini entha dhooram theeskelluthundhi?
— Netflix India South (@Netflix_INSouth) November 25, 2024
Watch Lucky Baskhar on Netflix, out 28 November in Telugu, Tamil, Malayalam, Kannada and Hindi!#LuckyBaskharOnNetflix pic.twitter.com/v3dqkii31q
ஒரு கட்டத்தில் தான் செய்யும் குற்றத்தை உணரும் துல்கர், அதிலிருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதே மீதிக் கதை. லக்கி பாஸ்கர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. முன்னதாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான மகாநதி, சீதா ராமம் ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதேபோல் லக்கி பாஸ்கர் திரைப்படமும் அதிக வசூலை பெற்றது. இந்நிலையில் லக்கி பாஸ்கர் திரைப்படம் இந்த மாத இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. அதன்படி வரும் நவம்பர் 28ஆம் தேதி லக்கி பாஸ்கர் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.