‘நீ நல்லவனா இருந்தா கடைசி வரைக்கும் நல்லா இருக்க முடியாது’- ‘லக்கிமேன்’ டிரைலர்.

photo

 

திங்க் ஸ்டுடியோ தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘லக்கிமேன்’. இந்த படத்தின் கதாநாயகனாக யோகிபாபு நடித்துள்ளார். அதிஷ்டத்தை மைய்யமாக வைத்து வித்தியாசமான கதைகளத்தில்  தயாராகியுள்ள இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, சந்தீப் கே விஜய் ஒளிபதிவு செய்துள்ளார். இந்த படத்தில் யோகிபாபு உடன் இணைந்து நடிகர் வீரா, ரேச்சல் ரெபேக்கா, பாலாஜி, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி. அமித் சாத்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரைலரில், அதிஷ்டத்தை தேடும் மனிதர், அந்த அதிஷ்டத்தால் என்ன மாதிரியான சிக்கல் வருகிறது அதை அவர் எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதே படத்தின் கதையாக தெரிகிறது. படம் உலகம் முழுவதும் அடுத்த மாதம் ஒன்றாம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலரை பிரபல நடிகர்களான ஆர்யா மற்றும் அருண் விஜய் இணைந்து வெளியிட்டுள்ளனர். 

 

Share this story