லைக்காவின் இரண்டு படங்களில் நடிக்கும் ரஜினி... நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

rajini

லைக்கா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தை தயாரித்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அரவிந்தசாமி, வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படம் விரைவில் தொடங்கவுள்ளது. 

rajini

அதேபோன்று ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார். கிரிக்கெட் கதைக்களத்தை கொண்ட இப்படத்திற்கு ‘லால் சலாம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். அவரின் கதாபாத்திரம் 20 நிமிடம் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோன்று இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். 

rajini

 சிபி சக்கரவர்த்தி மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவர் இயக்கும் இரண்டு படங்களையும் லைக்கா தான் தயாரிக்கவுள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் அறிவிப்பு நாளை வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் தொடக்கவிழா நாளையே நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த ரஜினி, லைக்காவின் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story