ஏகே 62... பொன்னியின் செல்வன் 2 அப்டேட்டா... லைக்கா அறிவிப்பால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

lyca

லைக்கா நிறுவனம் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 தென்னிந்தியாவில் முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது லைக்கா. ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. அந்த வகையில் ரஜினி 170, அஜித் 62, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றனர். 

lyca

இந்நிலையில் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அந்த அறிவிப்பு நாளை காலை 10.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது எந்த மாதிரியான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

lyca

மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் அஜித்தின் 62 வது படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகலாம் என ரசிகர்கள் இந்த அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதுதவிர ரஜினியின் 170வது படத்தின் அறிவிப்பாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Share this story