லைக்கா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.... குழப்பத்தில் அஜித் ரசிகர்கள் !

ak62

லைக்காவின் முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது அஜித் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 தென்னிந்திய சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்.‌ இந்த நிறுவனம் கடந்த ஆண்டு அஜித் 62வது படத்தை தயாரிப்பதாக அறிவித்தது.‌ இந்தப் படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இசையமைப்பாளர் அனிரூத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்றும் கூறப்பட்டது.‌

ak62

இந்த படத்திற்கான பணிகள் கடந்த ஆறு மாதமாக நடைபெற்ற நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் கதையில் திருப்தி இல்லை என லைக்கா அவரை நிராகரித்து விட்டது. அதனால் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து விலகிய நிலையில் அஜித்தின் 62 வது படத்தை தடம்,  கலகத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்குவார் என தகவல் வெளியானது. 

ak62

ஆனால் புதிய இயக்குனருக்கான் அறிவிப்பை இன்னும் லைக்கா நிறுவனம் வெளியிடவில்லை. இந்நிலையில் நாளை காலை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அது அஜித் படத்தின் அறிவிப்பா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் புதிய ஒன்று வெளியாகியுள்ளது.‌‌ அதன்படி லைக்காவின் அந்த அறிவிப்பு அதர்வா படத்திற்குரியது என்று கூறப்படுகிறது. இது அஜித் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story