பகத் பாசிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'வேட்டையன்' படக்குழு...!

fagath fasil

சென்னை, நடிகர் ரஜினிகாந்த் தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'ஜெய்பீம்' பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்தில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, சென்னை, மும்பை, திருநெல்வேலி, பாண்டிச்சேரி எனப் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நடிகர் பகத் பாசில் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், லைகா நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய சினிமாவின் இரண்டு தூண்களாக இருக்கும் ரஜினி காந்த் மற்றும் அமிதாப் பச்சனுடன் நடிகர் பகத் பாசில் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அதில் அந்த இரண்டு பெரிய நடிகர்களும் பகத் பாசிலின் தோளில் கையை போட்ட படி உள்ள உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளர். மேலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். 


 

Share this story