தளபதி விஜய் மகன் சஞ்சய்யின் பிறந்தநாள்.. லைகா நிறுவனம் வாழ்த்து

தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருபவர் விஜய். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அரசியல் கட்சியையும் தொடங்கிவிட்டார். வெங்கட் பிரப இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து ஏற்கனவே கமிட்டான தளபதி 69 படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகுவதாக விஜய் கூறியுள்ளார். இதனிடையே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தனது தந்தையை போலவே சஞ்சயும் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். 

Jason

சினிமா மேக்கிங், டைக்ரஷன் குறித்த படிப்பை வெளிநாட்டில் பயின்றுள்ள ஜேசன், Pull The Trigger என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Lyca

இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில் இந்த படத்தின் ஹீரோ யார் என்பது உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. வளர்ந்து வரும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள், உங்கள் பாதையில் வெற்றிகளும் சாதனைகளும் தொடரட்டும் என்று பதிவிட்டுள்ளது. 

Lyca

Share this story