'சச்சின்' படத்தின் 'கண்மூடி திறக்கும்போது' பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்...

விஜய் - ஜெனிலியா நடித்த சச்சின் திரைப்படத்தின் 'கண்மூடி திறக்கும்போது' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 2005 ஆம் ஆண்டு ஜான் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் சச்சின். இவர்களுடன் வடிவேலு, சந்தானம், பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர். விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும் இடையே மிக அழகான கெமிஸ்டிரி இப்படத்தில் இருக்கும். இதனால் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டனர். இன்றும் இப்படத்தின் காமெடி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்துக் கொண்டுதான் உள்ளது.
சச்சின் விரைவில் திரையில்❤️#SacheinRerelease #KanmoodiThirakumbothu lyrical video
— Kalaippuli S Thanu (@theVcreations) March 1, 2025
▶️https://t.co/neu7aCMOAR
Thalapathy @actorvijay @Johnroshan @ThisIsDSP @geneliad #Vadivelu @iamsanthanam @bipsluvurself#ThotaTharani #VTVijayan #FEFSIVijayan #SacheinMovie @idiamondbabu… pic.twitter.com/WCj5t3pkJs
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த நிலையில் பாடல்கள் அனைத்தும் பெருமளவு ஹிட்டானது. இந்நிலையில் ஏப்ரல் மாதத்துடன் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'கண்மூடி திறக்கும்போது' பாடலின் லிரிக்கல் வீடியோ புதிய வெர்ஷனில் வெளியாகியுள்ளது.