வேதனையின் விளிம்பில் வைரமுத்து -என்ன காரணம் தெரியுமா ?

vairamuthu

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளார் .அது மட்டுமின்றி பல கவிதை புத்தகங்களையும் எழுதியுள்ளார் .இந்நிலையில் அவர் சமீபத்தில் தன மீது வந்த பழி பற்றி தான் வேதனை பட்ட தாக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார் 
நிழல்கள் படத்தில் 'இது ஒரு பொன் மாலை பொழுது' என்ற பாடலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. முதல் பாடலே அவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமின்றி இளையராஜாவின் இசையிலும் தொடர்ந்து பாடல்கள் எழுதுவதற்கான சூழ்நிலையையும் உருவாக்கிக்கொடுத்தது. அதன்படி ராஜாவும் வைரமுத்துவும் சேர்ந்து ஏகப்பட்ட கிளாசிக் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள். அவை இன்றளவும் பலரால் ரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பாடகி சின்மயி இவர் மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுகள் திரையுலகில் அதிர்வுகளை ஏற்படுத்தின.
ஆனால் சின்மயி முன்வைத்த குற்றச்சாட்டுகளை வைரமுத்து மறுத்தார். இந்த நிலையில் தற்போது அவர் தன் மீது வைக்கப்படும் ஒரு புகார் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார். ஆனால் அது சின்மயி பற்றிய புகார் கிடையாது. இது வேறு ஒரு புகார். அவர் எழுதும் பாடல் வரிகளை மாற்றிக் கொடுக்க முடியாது தான் கூறுவதாக பலரும் புகார் செய்வதாக கூறியுள்ளார். தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “என் மீது ஒரு பழி உண்டு. பாடல்களில் திருத்தம் கேட்டால் செய்யமாட்டேன் என்று. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. திருத்தத்திற்கு ஒரு கருத்தமைதி வேண்டும். இருந்தால், அதற்கு நான் உடனே உடன்படுவேன்; மாற்றியும் கொடுப்பேன்; கொடுத்திருக்கிறேன்"என்று பதிவிட்டுள்ளார் .

Share this story