மீண்டும் இணைந்த M. Kumaran S/O Mahalakshmi பட கூட்டணி...

”எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி” திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்
ரீ-ரிலீஸ் ஆனது.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், நதியா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’. இப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.
இத்திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கடந்த 14ம் தேதி ரீ-ரிலிஸ் ஆனது. அதையொட்டி, நடிகை நதியா, இயக்குனர் மோகன் ராஜா மற்றும் நடிகர் ரவி மோகனை சந்தித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் ரவிமோகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ’எனது திரைப் பயணத்திலேயே மைல் கல்லாக விளங்கும் படம் f-ரிலீஸாகியிருப்பது மகிழ்ச்சி' என தெரிவித்திருக்கிறார்.