உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்'... உழைப்பாளர் தினத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு !

maamanan

உதயநிதி நடிப்பில் உருவாகும் 'மாமன்னன்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.‌

 உதயநிதி கடைசியாக நடித்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

maamanan

இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story