மீண்டுமொரு சாதனை படைத்த 'மாமன்னன்' திரைப்படம்- மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர்.

photo

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் கடந்த மாதம் வெளியான மாமன்னன் திரைப்படம் வசூல் சாதனை படைத்தது மட்டுமல்லாமல் தற்போது படம் வெளியான ஓடிடி தளத்திலும் புது சாதனை படைத்துள்ளது.

photo

நடிகர் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என முன்னணி நட்சத்திர கூட்டணியை கொண்டு தயாரான திரைப்படம் மாமன்னன். இந்த படத்தின் துவக்கம் முதல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது காரணம், இதற்கு முன்னர் இப்படத்தின் இயக்குநரான மாரிசெல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களின் வெற்றி என்று சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் இந்த படம் உதயநிதியின் கடைசி திரைப்படம் என்பதால். இப்படம் திரையரங்கில் வெளியான நாள்முதல் ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றது.


 

படத்தின் வெற்றியை படக்குழு கேக்வெட்டி கொண்டாடினர், உதயநிதி மினிகூப்பர் கார் ஒன்றை இயக்குநர் மாரிசெல்வராஜிக்கு பரிசாக வழங்கினார். இந்த நிலையில் படம் 50 கோடிக்குமேல் வசூலித்து சாதனை படைத்தது. தொடர்ந்து படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி  தளத்தில் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீமிங்  ஆகியுள்ளது. வெள்ளித்திரையை தொடர்ந்து ஓடிடி தளமான நெட்பிளிக்ஸிலும்  தங்கள் ஆதரவை வழங்கி தொடர்ந்து 3 நாட்களாக ட்ரெண்டிங் நம்பர் 1ல் வைத்துள்ளனர். இதனை புகைப்படத்துடன் இயக்குநர் மாரிசெல்வராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Share this story