இது எப்படி இருக்கு……இணையத்தை கலக்கும் “மாமன்னன் வெர்ஷன்” புகைப்படங்கள்.

photo

நடிகர் உதயநிதியின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள மாமன்னன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்புக்கு மத்தியில் தயாராகியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ளார்.  போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் போஸ்டர், புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிலையில் தற்போது ‘மாமன்னன் வெர்ஷன்’ என சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

photo

photo

 ஒரு போஸ்டரில் நடிகர் வடிலேலு கையில் துப்பாக்கி  மற்றும் உதயநிதி கைய்யில் வாளுடன் இருவரும் நாற்காலியில் கெத்தாக அமர்ந்துள்ளனர்.  இந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கு பதிலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் –சிவகார்த்திகேயன், தல அஜித்- சிம்பு, தளபதி விஜய்- விஜய் சேதுபதி, கமல் ஹாசன்- சூர்யா, சியான் விக்ரம்- துருவ் விக்ரம் என தங்கள் விருப்பமான நடிகர்களை இணைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளனர் இணையவாசிகள்.

photo

photo

இதனை பார்த்த ரசிகர்கள் யாரு பாத்தவேலை இது, பேன்ஸ் எடிட்டா இருந்தாலும் பார்க்க நன்றாக இருப்பதாக கூறிவருகின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்திசுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

Share this story