அந்த காட்சியை பார்த்து நானே கதறி அழுதேன்... வடிவேலு உருக்கம் !

vadivelu

மலை உச்சியில் நான் அழும் காட்சியை பார்த்து தானே கதறி அழுததாக நடிகர் வடிவேலு தெரிவித்தார். 

வடிவேலு மற்றும் உதயநிதி கூட்டணியில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் 50வது நாளை வெற்றிக்கரமாக எட்டியுள்ளது. இதன் 50வது நாள் வெற்றிவிழா நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

vadivelu

இந்த நிகழ்ச்சியில் பேசிய வடிவேலு, நான் ஏராளமான நகைச்சுவை படங்களில் நடித்தபோதிலும், இந்த ஒன்றை படம் தான் பெரிய பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது. இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இந்த படத்திற்கான கதையை மாரி செல்வராஜ் சொல்லும் போது இருந்த பாசம், உணர்வு ஆகியவை கிட்டத்தட்ட 30 படங்களை இயக்கிய இயக்குனருக்கான அனுபவத்தை பார்த்தேன். 

vadivelu

படத்தில் நடிக்க முக்கிய காரணம் உதயநிதிதான். இந்த படம் இப்படியான வெற்றியை பெறும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. படத்தில் உள்ள 6 காட்சிகள் என்னை தூக்கவிடவில்லை. மலை உச்சியில் நான் அழும் காட்சியை பார்த்து நானே கதறி அழுதேன். அப்போது நான் வேறொருவரை பார்த்து அழுதேன். இதுபோன்று சில காட்சிகளை அழகாக படமாக்கியிருந்தார் மாரி செல்வராஜ். 

மாரி செல்வராஜ் இயக்கிய ஒவ்வொரு காட்சியிலும் ஒரு ஜீவன் இருந்தது. வலி இருந்தது. நிறைய நகைச்சுவை படங்களில் உதயநிதி நடிக்கவேண்டும். இதுபோன்ற படத்தை உதயநிதியை போல யாரும் நடிக்கமுடியாது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி என்று வடிவேலு தெரிவித்தார். 

 

 

 

Share this story