‘மாநாடு’ சிம்புவின் பிரத்யேக காட்சியை வெளியிட்ட படக்குழு.. ரசிகர்கள் வரவேற்பு
‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பிரத்யேக காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிம்புவின் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த மாதம் வெளியானது. சுரேஷ் காமாட்சி தயாரித்த இப்படம் திரையரங்கில் இன்றைக்கு ஹவுஸ்புல்லாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் வசூல் மழையும் படமாக மாறிவிட்டது ‘மாநாடு’.

இப்படத்தில் சிம்புவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிம்புக்கு கம்பேக் படமாக மாறிவிட்ட இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கும் பாராட்டு குவிந்து வருகிறது. தற்போது இந்த படம் ’ டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக சோனி லைவ் ஓடிடி தளத்திலும் வெளியாகவிருக்கிறது.

இப்படத்தில் சிம்புவின் சில காட்சிகள் ரசிகர்களின் மனம் கவர்ந்தவையாக மாறிவிட்டது. இதேபோன்று எஸ்.ஜே.சூர்யாவின் தலைவரே சொல்லும் வசனங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றவையாக மாறிவிட்டது. இந்த காட்சிகள் ரசிகர்களின் வாட்ஆப் ஸ்டேட்டஸ்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பிரத்யேக காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் ரசிகர்களின் வரவேற்பு பெற்றுள்ளது.

