‘மாநாடு 2’ கம்மிங்……- அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு!

photo

மாநாடு படம் வெளியாகி 2ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு போட்டுள்ள பதிவு  தற்போது வைரலாகி வருகிறது.

லுப் காட்சிகளை வைத்து ரசிகர்களுக்கு போர் அடிக்கா வண்ணம் இயக்குநர் வெங்கட் பிரபு தரமான படைப்பாக உருவாக்கியது மாநாடு படம். இந்த படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து, எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் என பலர் நடித்திருந்தனர். சிம்புவின் வாழ்கையில் இந்த படத்திற்கு தனி இடம் உண்டு. இந்த நிலையில் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பல மாநாடு குறித்த பதிவுகளை வெளியிட்டனர்.

photo

அந்த வகையில் சிம்பு மாநாடு படம் குறித்து “ மாநாடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் அந்த லூப்பிற்குள் செல்ல ஆவலாக உள்ளேன். அனைவருக்கும் நன்றி.” என பதிவிட்டு அதனை இயக்குநர் வெங்கட் பிரபுவை டாக் செய்திருந்தார். அதற்கு பதில் கொடுத்த வெங்கட்பிரபு “Loop continues” என பதிலளித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ மாநாடு2 படத்தை எதிர்பார்க்கலாமா என கேட்டு வருகின்றனர்.

Share this story