மாரி செல்வராஜின் ‘வாழை’ : அடுத்த அப்டேட்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’. இதனை நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் வெளியீட்டில் தாமதம் இருந்த நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
அண்மையில், ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிளான ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பாடகர் தீ பாடியுள்ளார். வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். தீ குரலில் ஆர்ப்பாட்டம் இல்லாத கிளாசிக்கல் மெலடியாய் மனதை வருடுகிறது பாடல்.இந்நிலையில், வாழை படத்தின் இரண்டாவது பாடல் " ஒரு ஊருல ராஜா" பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.