நல்ல விமர்சனங்களை பெறும் ‘மாவீரன்’... முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா ?

maaveeran

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக இயக்குனர் மிஷ்கினும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, முன்னணி நடிகை சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 

maaveeran

ஃபேண்டஸி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவர் எப்படி மாவீரனாக மாறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை காமெடி கலந்து கொடுத்திருப்பது அனைவரிமும் பாராட்டை பெற்று வருகிறது. 

maaveeran

இந்த படம் தமிழகம் தவிர தெலுங்கு மற்றும் வெளிநாடுகளிலும் ஏராளமான திரையரங்கில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூலில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் 7.60 கோடி ரூபாயை கடந்துள்ளது. அதேபோன்று வெளிநாடுகளில் 2 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Share this story