‘மாவீரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.

photo

சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில், இயக்குநர் மாடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மாவீரன்’. இவர்களுடன் இணைந்து சரிதா, மிஷ்கின், மோனிஷா, சுனில், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பரத் ஷங்கர் இசையமைத்திருந்தார்.  கடந்த ஜூலை 14ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ்ஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

photo

அதன்படி, இம்மாதம் 11ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.  இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் படத்தை காண ஆவலாக  உள்ளனர்.  சுமார் 35 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூலித்தது சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Share this story