சத்யாவாக மாறும் சிவகார்த்திகேயன்... 'மாவீரன்' புதிய வீடியோ வெளியீடு !

'மாவீரன்' படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மேக்கப் போடும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த படம் 50 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.
ஃபேண்டஸி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவர் எப்படி மாவீரனாக மாறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை காமெடி கலந்து கொடுத்திருப்பது அனைவரிமும் பாராட்டை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மேக்கப் போடும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
How @Siva_Kartikeyan transferred himself as #Maaveeran
— Ramesh Bala (@rameshlaus) July 22, 2023
The movie is having a fantastic 2nd weekend at the Box office.. pic.twitter.com/8iYvMBd0Sm
How @Siva_Kartikeyan transferred himself as #Maaveeran
— Ramesh Bala (@rameshlaus) July 22, 2023
The movie is having a fantastic 2nd weekend at the Box office.. pic.twitter.com/8iYvMBd0Sm