விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை - நடிகர் சிவகார்த்திகேயன் !

maaveeran

நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசையுடன் இருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.  ‌

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'மாவீரன்'. கோழையாக இருக்கும் ஒருவன் திடீரென வீரனாக மாறும் கதை தான் இந்த படம்.  கடந்த 14-ஆம் திரையரங்குகளில் வெளியாக இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இப்படம் சுமார் 50 கோடி மேல் வசூலித்துள்ளது. 

maaveeran

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். வில்லனாக பிரபல இயக்குனர் மிஷ்கினும், முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை சரிதாவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருந்தார். ஆனால் அதற்காக ஒரு ரூபாய் கூட அவர் வாங்கவில்லை. 

maaveeran

இ‌ந்நிலையில் மாவீரன் படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துக் கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், எனக்கும், விஜய் சேதுபதிக்கும் போட்டி என்கிறார்கள்.  அது உண்மையில்லை. அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் என்று கூறினார். 

 

Share this story