அமீரின் ‘மாயவலை’ படத்தின் முதல் பாடல் அப்டேட்!....

photo

அமீர் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாயவலை’ படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

photo

ஓர் இயக்குநராக தரமான படங்களை கொடுத்த அமீர் தற்போது நடிகராகவும் அசத்தி வருகிறார். குறிப்பாக வெற்றிமாறன்- அமீர்-தனுஷ்  கூட்டணியில் வெளியான ‘வட சென்னை’ படத்தில் ராஜன் கதாப்பாத்தில் நடித்து  மிரட்டியிருப்பர். இந்த நிலையில் அமீர் சமீப காலமாக புது புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ‘மாயவலை’ படத்தை தயாரித்து, நடித்துள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தை இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதில் அமீர், ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து சஞ்சிதா ஷெட்டி, ஆர்யாவின் சகோதரர் சத்யா ஆகியோர்  நடித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘மாயவலை’ படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக மாலை 5 மணிக்கு வெளியாகும் எனஆறிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

Share this story