சிவகார்த்திகேயனின் மதராஸி படம் எப்படி இருக்கு ?-ரசிகர்கள் கருத்து

madharasi

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் பட வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார் .இப்படம் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது .இந்நிலையில் அப்படத்தை பற்றி ட்விட்டரில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .அது பற்றி நாம் காணலாம் 
மதராஸி படத்தின் கதையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சட்டவிரோத ஆயுதக் கடத்தலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. வட இந்திய மாஃபியாவுக்கும், இரண்டு சிறப்பு அதிரடிப் படைகள் இடையே நடக்கும் ஆக்‌ஷன் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளது. நாயகன் சிவகார்த்திகேயன் ரகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரகு தனது காதலியைக் காப்பாற்ற களமிறங்குகிறார், ஆனால் அவரது நிலையற்ற மனநிலை அவரை வன்முறை பக்கம் இழுத்துச் செல்கிறது. இதனால் அவர் ஹீரோவா அல்லது வில்லனா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல், பழிவாங்கல், தியாகம், நட்பு, இரண்டு குழுக்களுக்கு இடையிலான போர் போன்ற அம்சங்கள் கதையில் முக்கியமாக இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு அற்புதம். தனது நடிப்பால் படத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படத்தின் கதைக்களம் வலுவானது. ஏ.ஆர். முருகதாஸின் திரைக்கதை, இயக்கம் சிறப்பாக உள்ளது. அனிருத்தின் இசை, பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. படத்தின் தரமும் அருமையாக உள்ளது. ருக்மிணி வசந்த் தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். காதல் காட்சிகள் சிறப்பு. இந்தப் படத்திற்கு எனது மதிப்பீடு 4/5 என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.

Share this story