மும்பையில் சொகுசு பங்களா வாங்கியுள்ளாரா நடிகர் மாதவன்..?

madhavan

அலைபாயுதே மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் போன்ற படங்கள் மூலம் அதிக பெண் ரசிகைகளை ஈர்த்தவர் நடிகர் மாதவன். தமிழில் இடையில் கொஞ்சம் சறுக்கல்கள் ஏற்பட ஹிந்தி பக்கம் சென்று ரங் தே பசந்தி, குரு, 3 இடியட்ஸ் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.பின் 2016ம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று அவரது சினிமா பயணத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கமாக அமைந்தது. அதன்பிறகு ஹிந்தி, தமிழ் என பிஸியாக நடிக்கும் மாதவன், இயக்குனர் அவதாரமும் எடுத்தார்.

Madhavan

தற்போது நடிகர் மாதவன் மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அபார்ட்மெண்டின் விலை ரூ. 17.5 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.சுமார் 4200 சதுர அடியில் பரந்து விர்ந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு ஆடம்பர சொகுசு வசதிகள் உள்ளதாம். 

Share this story