"எந்த ஒரு கட்சியை ஆதரித்தோ நான் எதையும் இதுவரை சொல்லவில்லை"-மாதவன் கூறிய தகவல்
துரந்தர்’, ‘ராக்கெட்ரி’ படங்களில் நடித்ததாலும் பிரதமர் மோடியுடன் நெருங்கி இருப்பதாலும் மாதவன் பாஜவில் சேரப்போகிறார் என பாலிவுட்டில் பேசப்படுகிறது.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், உங்களுக்கு ‘சங்கி’ என்ற முத்திரை குத்தப்படுகிறதே? என்ற கேள்விக்கு பதிலளித்த மாதவன், “எந்த ஒரு கட்சிக்கு எதிராகவோ, எந்த ஒரு கட்சியை ஆதரித்தோ நான் எதையும் இதுவரை சொல்லவில்லை. யாராவது நல்லது செய்தால் நான் அதை முன்னிலைப்படுத்துவேன். மக்களால் ஒருவர் முதல்வராகவோ, பிரதமராகவோ தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரை ஆதரிப்பது என்னுடைய கடமை என நான் நினைக்கிறேன்.நான் அது போன்ற கமெண்டுகளை (சங்கி) படிப்பேன். அது என்னுடைய முடிவுகளை மாற்றாது. அது குறித்து என்னை யாராவது வருத்தப்படும்படி செய்தால், அவர்களின் நோக்கத்தை நான் கேள்வி எழுப்ப விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

