நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனுடன் நடிக்கும் மீரா ஜாஸ்மீன்.. ‘டெஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட்

test

 மாதவன் நடிக்கும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை மீரா ஜாஸ்மீன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’, ‘மண்டேலா’ உள்ளிட்ட படங்களை YNOT studios நிறுவனம் மூலம் தயாரித்தவர் சசிகாந்த். இவர் தற்போது ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.   

test

பெரிய பட்ஜெட்டில் YNOT studios  நிறுவனமே தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தில் பிரபல பெண் பாடகி சக்தி ஸ்ரீ இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

test

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை மீரா ஜாஸ்மீன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அவர் தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதேநேரம் ‘ரன்’ படத்திற்கு பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு மாதவனுடன் மீரா ஜாஸ்மீன் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 

 

 

Share this story