நான் ரெடி தான் பாடலுக்கு நடனமாடிய மடோனா செபாஸ்டியன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், மற்றும் திரைப்பட இயக்குநர்கள் மிக்ஷின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.
Naan Ready Thaaan….. BTS 💥
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 1, 2023
Madonna Sebastian & Agent Tina 😝
pic.twitter.com/i6EKOjpHd2
இத்திரைப்படம் கடந்த 19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூலித்து லியோ திரைப்படம் சாதனை படைத்துள்ளது. நடப்பு வருடத்தில் முதல் நாளிலேயே 140 கோடி வசூலித்த முதல் திரைப்படம் லியோ என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இது மட்டுமன்றி இங்கிலாந்திலும் முதல் நாளில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ள லியோ திரைப்படம். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரசிகர்கள் மட்டுமன்றி லியோ படம் பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில், நான் ரெடி தான் பாடலுக்கு மடோனா செபாஸ்டியனும், ஏஜென்ட் டீனாவும் நடனமாடிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.