ரத்தம் வழியும் முகத்துடன் மடோனா செபாஸ்டியன்

ரத்தம் வழியும் முகத்துடன் மடோனா செபாஸ்டியன் 

தளபதியின் ‘லியோ’ படத்தில் எலிசா தாஸ் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்த மடோனா செபாஸ்டியன், ஷூட்டிங் ஸ்பாட்டில் எ டுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ரத்தம் வழியும் முகத்துடன் மடோனா செபாஸ்டியன் 

மலையாலத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தவர்  மடோனா. அந்த படம் தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது, அதன் மூலமாக தமிழக மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மடோனா, தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘காதலும் கடந்துபோகும்’ படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். அடுத்தடுத்து சரியாக படங்கள் எதுவுமே செட்டாகவில்லை.

ரத்தம் வழியும் முகத்துடன் மடோனா செபாஸ்டியன் 

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் அவரின் சகோதரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவரானார். சில காட்சிகளில் மட்டும் நடித்திருந்தாலும் அவரது கதாப்பாத்திரம் தரமாக இருந்ததாக பலர் அவரை பாராட்டினர். இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ரத்தம் வழியும் முகத்துடன் இருக்கும் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 
 

Share this story