மடோனா செபாஸ்டியன் நடித்த 'ஹார்ட்டின்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

madonna

டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் காதல்-நகைச்சுவை (Rom-Com) திரைப்படம் 'ஹார்ட்டின்' தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் ஃபீல் குட் படமாக தயாராகி வரும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.

'மகான்', 'பேட்ட', 'ஜில் ஜங் ஜக்' புகழ் சனந்த் இப்படத்தில் நாயகனாக நடிக்க மடோனா செபாஸ்டியன் மற்றும் புதுமுகம் இமயா நாயகிகளாக நடிக்கின்றனர். பிரபல நடிகர்கள் இதர முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

heartin
ஹார்ட்டின் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார், "ரோம்-காம் என்று சொல்லப்படும் நகைச்சுவை கலந்த காதல் கதை இது. அனைத்து ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கி வருகிறோம். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. சென்னை, ஜெய்ப்பூர் மற்றும் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. 2025 கோடை விடுமுறைக்கு 'ஹார்ட்டின்' படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.இந்த திரைப்படத்திற்கு 'சுழல்' இணையத் தொடர் மற்றும் 'கொலைகாரன்' புகழ் முகேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ’நேரம்', 'பிரேமம்', 'கோல்டு' உள்ளிட்ட சூப்பர் ஹிட் மலையாள படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.
 

Share this story