"மெட்ராஸ் மேட்னி"படத்துக்கு வந்த அதிர்ஷ்டம் -வெற்றி பெறும் சின்ன பட்ஜெட் படங்கள்

sathyaraj

சமீபத்தில் கோலிவுட்டில் சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்று  ,பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தழுவி வருகிறது .இந்த சின்ன பட்ஜெட்டில் மெட்றாஸ் மேட்னி படமும் இடம் பெறுகிறது 

சமீபத்தில் வெளியான கங்குவா ,தக் லைஃப் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வசூலில் பின் தங்கியுள்ளது 
ஆனால் சின்ன பட்ஜெட் படமான வாழை ,லப்பர் பந்து ,டூரிஸ்ட் ஃ பேமிலி போன்ற படங்கள் வெற்றி பெற்று ள்ளது ,இந்த லிஸ்டில் சமீபத்தில் வெளியாகிய மெட்ராஸ் மேட்னி படமும் இடம் பெற்றுள்ளது 
இப்படத்தில் காளி வெங்கட், சத்யராஜ், ரோஷினி ஹரிபிரியன், ஷெலி மற்றும் விஷ்வா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு மிடில் கிளாஸ் மனிதனின் வாழ்க்கையில் நேரும் சந்தோஷம்,துக்கம் பற்றிய கதை இது 
இந்த  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது .
படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் பிரபல  திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் வெளியான படங்களில் மெட்ராஸ் மேட்னி படம் நல்ல வசூலை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் .இப்படி சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது சினிமாவின் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர் 

Share this story