'ருத்ர தாண்டவம்' படத்தைச் சுட்டிக்காட்டி கிறிஸ்துவ மதபோதகர் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி!

rudra-thandavam-33

'ருத்ர தாண்டவம்' படத்தை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டி தீர்ப்பு அளித்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. 

நாடக காதல் கதைகளாத்தை மையமாக வைத்து ‘திரெளபதி’ படத்தை இயக்கிய மோகன் ஜி அதையடுத்து மதமாற்ற அரசியல் கதைக்களத்தில் 'ருத்ர தாண்டவம்' படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இரண்டாவது முறை ரிச்சர்ட் ரிஷியுடன் அவர் கூட்டணி அமைத்தார். படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. 

ருத்ர தாண்டவம் படத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய பின்னரும் சலுகைகளுக்காக பழைய மதத்தின் அடையாளத்தையே பயன்படுத்தும் அரசியலை காணிப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கருத்துக்கள் எழுந்தன. 

rudra thandavam

rudra thandavam

இந்நிலையில் கிறிஸ்துவ மதபோதகர் ஜார்ஜ்பொன்னையா கைது விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி ருத்ரதாண்டவம் படத்தையும் ருத்ரதாண்டவம்  படத்தில் வரும் கிரிப்ட்டோ கிறிஸ்டியன் வசனத்தையும்  சுட்டிக்காட்டி தீர்ப்பு கொடுத்துள்ளார்.

"இந்திய சினிமாவில் ஒரு படத்தை முன் வைத்து நீதிமன்றம் கூறும் பெரிய தீர்ப்பு இது என்ற பெருமையை தேடிதந்த ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி." என்று ருத்ர தாண்டவம் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

Share this story