100 கோடி வசூலை கடந்தது மகாராஜா திரைப்படம்..!!

1

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி ஹீரோககிளில் ஒருவராக வலம் வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. வில்லன் ஹீரோ என அனைத்திலும் தூள் கிளப்பி வரும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி பல பன்மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘மகாராஜா’ கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுதுவம் உள்ள திரையரங்குகளில் வெளியானது .

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் , மமதா , நடராஜ், பாரதிராஜா, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வந்த நிலையில் வசூலிலும் தூள் கிளப்பியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருந்தனர் .

இந்நிலையில் தற்போது இப்படம் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

நடிகர் விஜய் சேதுபதிக்கு கடந்த சில படங்கள் நினைத்த அளவிற்கு ஓடாமல் இருந்ததால் அடுத்தடுத்த படங்களில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில் தற்போது அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளதாக ஒரு பக்கம் கிசுகிசுக்க படுகிறது ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Share this story