சீனாவில் ‘மகாராஜா’…. முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ?
தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை குரங்கு பொம்மை படம் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்திருந்தார். மேலும் சாச்சனா, அபிராமி, திவ்யபாரதி, நட்டி நடராஜ், சிங்கம் புலி, மம்தா மோகன்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
அதன்படி நித்திலன் சாமிநாதன் ஹீரோவை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை இயக்கியிருந்ததால் இன்று வரையிலும் இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுக்களைப் பற்றி வருகிறது. இந்நிலையில் தான் நேற்று (நவம்பர் 29) சீனாவிலும் இந்த படம் திரையிடப்பட்டது. அங்கும் இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதல் நாளை மட்தும் ரூ.10 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களிலும் இந்த படம் சீனாவில் அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.