சீனாவில் "மகாராஜா"... வைரலாகும் ரியாக்‌ஷன் வீடியோ...!

maharaja

விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தைப் சீன திரைப்பட ரசிகர்கள் கண்கள் கலங்கியபடி பார்த்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக உருவான மகாராஜா படம் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெளியானது. நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுராக் கஷ்யப் , அபிராமி , நட்டி , சிங்கம் புலி , முனிஷ்காந்த் , மம்தா மோகந்தாஸ்  உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 2024 ஆம் ஆண்டு சிறிய பட்ஜெட்டில் உருவாகி வசூல் ரீதியாக ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படங்களில் ஒன்று மகாராஜா. தமிழில் மட்டுமில்லாமல் இந்தி , தெலுங்கு என அனைத்து தரப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்கில் 100 நாட்கள் ஓடியது. இந்தியா தொடர்ந்து தற்போது செப்டம்பர் 29 ஆம் தேதி மகாராஜா திரைப்படம் சீனாவில் வெளியாக இருக்கிறது.


சீனாவில் மொத்தம் 40 ஆயிரம் திரைகளில் மகாராஜா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக சிறப்பு திரையிடல்கள் கடந்த வாரமாக நடைபெற்று வருகின்றன. இந்த திரையிடல்கள் படத்திற்கு சீன மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன. இதுவரை சிறப்புத் திரையிடல்கள் வழியாக மட்டும்  ரூ 2.35 கோடிவரை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சீனாவில் ஆமீர் கான் நடித்த தங்கல் படத்தின் வசூல் சாதனயை இப்படம் முறியடிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. 

மகாராஜா படத்தை பார்த்த சீன ரசிகர்களின் ரியாக்‌ஷன் வீடியோ. ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் எமோஷனலாகி கண்ணீர் சிந்தியது போலவே சீன ரசிகர்களும் படத்தின் இறுதியில் கண்ணீர் சிந்தி படத்தை பார்த்துள்ளார்கள். இந்த வீடியோ சீனாவில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பையே காட்டுகிறது. த்ரில் , அதனுடன் சேர்ந்த உணர்ச்சிவசமான கதை என படம் எல்லாம் தரப்பு ரசிகர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் இருப்பதே மகாராஜா படத்தின் மிகப்பெரிய பலம் என சொல்லலாம். 

Share this story