ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம்-எது தெரியுமா ?
தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த குரங்கு பொம்மை, மகாராஜா என இரு வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் நித்திலன் சாமிநாதன். மகாராஜா படத்துக்கு சீனாவில் கிடைத்த வரவேற்புக்கு பிறகு, ஹாலிவுட் ஸ்டுடியோ ஒன்று படத்தின் ரீமேக் உரிமைக்காக அணுகியதாக படத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் சில பேட்டிகளில் தெரிவித்தார். தொடர்ந்து ஹாலிவுட்டில் இப்படத்தை ஒரு முதன்மை நடிகரை வைத்து உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் பரவி வந்தது. குறிப்பாக Interstellar உட்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல Matthew McConaughey தான் `மகாராஜா’ படத்தின் ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் இதுதான்

