விஷு பண்டிகையை கொண்டாடிய மகிமா நம்பியார்... அழகிய புகைப்படங்கள் இதோ...

MahimaNambiar
விஷு பண்டிகையை கொண்டாடிய நடிகை மகிமா நம்பியாரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

அழகான பார்வையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை மகிமா நம்பியார். இளம் நடிகையாக வலம் வரும் இவர், ‘சாட்டை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே வெற்றியை பெற்றதை தொடர்ந்து அகத்திணை, கொடிவீரன், குற்றம் 23, இரவுக்க ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மதுரராஜா, மகாமுனி, அசுரகுரு உள்ளிட்ட படங்களில் மஹிமா நடித்துள்ளார்.

MahimaNambiar

இதில் மகாமுனி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுள்ளார். இதையடுத்து சத்யா, பெல்பாட்டம், குண்டுமல்லி உள்ளிட்ட சில படங்களை நடித்து முடித்துள்ளார். தற்போது பிரபுதேவா, அருண் விஜய், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட சில ஹீரோக்களின் படங்களில் நடித்து முடித்துள்ளார். 

MahimaNambiar

சமூக வலைத்தங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் மகிமா, தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஷு பண்டிகையை கலர்புல்லா கொண்டிய புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அழகான லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Share this story