மேஜர் முகுந்த் மிகப்பெரிய ரஜினி ரசிகர் : இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி

rajkumar periyasamy

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான இத்திரைப்படத்திற்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் உலகமுழுவதும் 100 கோடி ரூபா கடந்து வசூல் சாதனை  படைத்து வருகிறது. இது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களின் மிகப் பெரிய ஓப்பனிங் கொண்ட திரைப்படமாக அமைந்துள்ளது. இந்நிலையில், ‘அமரன்’ படத்தை பார்த்துவிட்டு பல்வேறு திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில்,  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதுதொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. 


இதுதொடர்பாக ஒரு ஊடகத்திற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அளித்த பேட்டியில் மேஜர் முகுந்த் மிகப்பெரிய ரஜினி ரசிகர் எனவும், ரஜினியின் வாழ்த்து செய்தியை பார்த்த மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்க்கீஸ், தற்போது முகுந்த் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார் எனவும், இந்த தருணம் தனக்கு கண்ணீர்  வந்துவிட்டது என உணர்ச்சி பூர்வமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிவித்துள்ளார். 


 

Share this story